Monday, November 25, 2013

How to run JAVA projects.... Using CMD Prompt...

Hi everyone!!!!!
         Today i upload this video to show you how to run java programs, using command prompt .....N i hope it helps definitely 4 java beginners... Thank U :))  






1. Start cmd. You will get something like this in the last line: 
    C:\Users\Anbu> 

2. If your project is not in C drive, type cd\. Then press Enter. You will get something like this in the last line:     C:\> 

3. If your project is in D drive, type d:. Then press Enter. You will get something like this in the last line:     D:\> 

4. It the path is not set, then go to My Computer-->C drive-->Program Files-->Java-->Select jdk--> bin.    After opening bin, copy the address from the address bar. Then type path in cmd and paste the address        that you copied. You will get something like this in the last line:    D:\>path C:\Program Files\Java\jdk1.6.0_20\bin. Then press Enter. Go to step 6. 

5. If the path is already set, go to step 6. 

6. Type javac Projectname.java. If there are no errors, type java Name_of_main_class.

Monday, October 21, 2013

தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex) போக்கும் வழிகள்.......




1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை. 

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

நன்றி-ஆதிரா....

Saturday, October 19, 2013

இவைகளெல்லாம் இந்தியாவில் தான் அதிகம் சாத்தியம்.. ( தமிழ்நாட்டுக்கு அதிகம் பொருந்தும்)



1வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.


2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.

3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.

4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.

5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.

6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.

7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.

8) கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும்  100 மதிப்பெண்.

9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.

10) ஒரு சினிமாவ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
அதேபானியில் படம் எடுப்பது.

11) பெத்தவன் பிறந்த நாள் தெரியாதவன் தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.

12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது .

14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV சேனல் ஆரம்பிப்பது.

16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

17) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.

18) இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.

19) பரிட்சை எழுதாதவனுக்கு என்று தேர்வு முடிவு வருவது" பாஸ்"

20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

21) Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வருவது.

22) இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும்.இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.

23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

24)இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர் 40 ரூபாய்க்கும் விற்க்கப்படுவது .

25) குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு. சாரயத் தண்ணீருக்கு பஞ்சமில்லை.

26)மின்சாரம் தட்டுப் பாட்டிலும் AC பேருந்து நிலையம் அமைக்கும் அளவிற்கு பெருந்தன்மை இருப்பது.

27)வடக்கே படிப்பவனுக்கு வேலு நாச்சியாரைப் பற்றி தெரியாது, தேற்கே படிப்பவனுக்கு நேதாஜி முதல் அனைவரையும் தெரிந்து இருப்பது.

28)சட்டசபை போவாங்க சட்டகிழிய சண்டை போடறதுக்கு மட்டும்.அதுக்கு கூட முன்ன நாலு கார் பின்ன நாலு கார் கண்டிப்பா போகணும்.

29) இலவசங்களை காட்டி காட்டியே மக்களை அடிமைப் படுத்த நினைப்பது.

30) ஆ ஊ னா தற்கொலை பண்ணிக்கறது.

31) பதவியில் இருந்துக் கொண்டு தன் சொந்த விருப்பு வெறுப்புகளையும் அரசியல் ஆக்குவது.

32) நான்கு வாரங்களில் சிவப்பழகு, முடியால் மலையைக் கட்டி இழுக்கலாம் என்று மடத்தனமாக விளம்பரம் செய்வது.

Tuesday, September 17, 2013

'அன்பு' முத்தம்


ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்.


அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.

யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் டப்பாவை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.

அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள குடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.

அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மண்ணிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார்.

அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

via Ilayaraja

Sunday, September 15, 2013

SOME UNKNOWN & INTERESTING FACTS :))



-Albert Einstein, one the greatest scientists of the 20th century is a known fan of the violin. He started his career as a clerk, but very few people know that Albert Einstein was a hopeless philanderer.  After his first divorce he married his cousin Elsa. During his second marriage he went out with his secretary and six more women, from whom he received different gifts.

-The White house was originally gray, as it was the color of the stone it was built with. The walls were painted in white to hide the dark spots from the smoke, which appeared after the Canadian troops burned it during the War in 1812.

-Analysts conducted a research and found out that during the last 3,500 years there were only 230 years of peace of the civilized world.

-The habit to shake hands when you meet a foreigner was originally the sign to show that both parties were unarmed.

-The first bomb that was dropped on Berlin killed every animal in the Berlin Zoo except the elephant.

-Leonardo Da Vinci invented scissors.

-In early times people got married preferably in June, because they had their annual bath in May. Consequently in June they still smelled and looked good. However, if the man started to smell, the bride carried the bouquet of flowers… Now, it is a tradition of the modern wedding.

-People in ancient Egypt removed their eyebrows to honor the memory of their dead cat.

-If a statue of a person, in a square or in a park, on a horse has both legs in the air, that means that the person died in the battle. If there is only one leg in the air, the person died from the injuries of the battle, and if all the legs are on the ground, then the death of the person was natural.

-Tablecloths were originally meant to wipe the hands and the face after the dinner.

-In 1830 ketchup was used as a medicine.

-Sometimes Bruce Lee moved so fast, that they needed to slow the film down to see his moves.


-The lighter was invented earlier than the matches.

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???


1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது?

2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது?

3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது?

4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு, பெண்ணிடம் பணிவாய் பேசும் போது?

5.
சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது?

6.
காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது?

7.
தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது?

8.
இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்திவிட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது?

9.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது?

10.
அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது
?

### 
சுயநலமில்லாதசெயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களும் எப்போதும் அழகு தான். :):)

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்???




1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது?

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது?

3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது?

4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது?

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள் ஆகும்? என்று கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது?

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது?

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது?

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது?

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது?

10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது?

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது?

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது?

13. பெண்மைக்கே உரிய வெட்கத்தை வெளிப்படுத்தும் போது?

14. பெண்மை எனும் ஸ்தானத்தில் இருந்து தாய்மை எனும் ஸ்தானத்தை அடையும் போது?


###
தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களும் எப்போதும் அழகு தான் :)


Friday, September 13, 2013

ஆண் என்பவன் யார்?


ஆண் என்பவன் யார்???

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....
© @ FacebooK