92வது ஆஸ்கர் விருதுகள்
வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்
ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி
திரையரங்கில் மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும்
நடைபெற்றது.
பாராசைட்:
இந்த ஆண்டின் சிறந்த
படமாக தென் கொரிய படமான
பாராசைட்-டை தேர்வு செய்ததோடு அல்லாமல்
மேலும் சிறந்த வெளிநாட்டு படம்,
சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநர்
ஆகிய பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 4 விருதுகள் பாராசைட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம் என்ற
பிரிவில் முதன்முறையாக விருது பெற்ற அயல்
மொழி திறைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம்
பெற்றுள்ளது. வாழ்க்கை
போரட்டத்தில் தினம் தினம் போராட்டம்
நடத்தி வாழ போராடி கொண்டிருக்கும் ஓர் ஏழை குடும்பத்துக்கும்,
வாழ்வின் அனைத்து சுக போகங்களையும்
அனுபவித்து கொண்டிருக்கும் ஓர் பணக்கார குடும்பத்திற்கும்
இடையேயான முரண்பாடுகளை எதார்த்தமாக சித்தரிக்கும் காவியமாக படைக்கப்பட்டிருக்கும் திரைப்படமே பாராசட்.
ஜோக்கர்:
உலகெங்கிலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது
போலவே ஜாக்கின் பீனிக்ஸ்க்கு இந்த
ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது
ஜோக்கர் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பின்னனி
இசைக்கான விருதும் ஜோக்கர் திரைப்படம் தட்டி
சென்றுள்ளது. மக்களை மகிழ்விப்பதற்காகவே ஓர்
சாதாரன ஸ்டேண்ட்-அப் காமெடியனாக நினைக்கும்
ஒருவனை எவ்வாறு இந்த சமூகம்
ஒதுக்கி, அவமானப்படுத்தி அவனை விரக்தியின் உச்சத்திற்கே
கொண்டுசென்று வேடிக்கையாக்கி தனக்குள் சிரிக்க வைத்து, கொலைகாரனாக்கி
கடைசியில் ஓர் கொள்ளை கூட்டத்திற்கு
தலைவனாக்கியது என்பதே ஜோக்கரின் கதைக்களம்.
ஹீத் லெட்ஜருக்கு அடுத்து இந்த ஜோக்கர்
கதாபாத்திரம் வேறொருவருக்கு சரியாக அமையுமா என்ற
கேள்வியை சரியாக உணர்ந்து ஜாக்கின்
பீனிக்ஸ் இத்திரைப்படத்தில் ஜோக்கராகவே வாழ்ந்திருக்கிறார். அதற்கான பலனாகவே இந்த
ஆஸ்கர் என்றால் அது மிகையாகாது.
1917:
முதல் உலகப்போர் நடைபெற்ற
காலகட்டத்தில் செய்திகளை கொண்டு செல்லும் இரு
இளம் வீரர்கள் சார்ந்த 1917 திரைப்படம் சிறந்த கிராஃபிக்ஸ் மற்றும்
சிறந்த ஒலிக்கலவைக்கான ஆஸ்கார் விருதுகளை தட்டிச்
சென்றுள்ளது. கதைகளத்தை கொண்ட சிறந்த
நடிகைக்கான விருது ஜூடி படத்தில்
நடித்த நடிகை ரெனி ஸெல்வெஜருக்கு
வழக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு
VS ஃபெராரி:
பிரபல கார் நிறுவனங்களான ஃபோர்ட்
மற்றும் ஃபெராரி நிறுவனங்களுக்கிடையே நடைபெற்ற
கார் பந்தய போரை அடிப்படையாகக்
கொண்டு உருவான திரைப்படமான ஃபோர்டு
VS ஃபெராரி சிறந்த படத்தொகுப்பு மற்றும்
சிறந்த ஒலி எடிட்டிங்கிற்கான ஆஸ்கர்
விருதுகளை தட்டி சென்றுள்ளது.
ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட்:
ஹாலிவுட்டின்
பொற்காலமாக கருதப்பட்ட 1960களில் நடைபெற்ற கொலை
சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட
ஒன்ஸ் அபான் ய டைம்
இன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்ததற்காக பிராட் பிட் அவர்களுக்கு
சிறந்த துணை நடிகருக்கான விருது
வழங்கப்பட்டது மேலும் இத்திரைப்படம் சிறந்த
தயாரிப்புகான விருது உட்பட இரண்டு
விருதுகளை தட்டி சென்றுள்ளது.
No comments:
Post a Comment